பக்கங்கள்

சனி, 18 பிப்ரவரி, 2023

Applications are invited for direct recruitment of Ophthalmic Assistant in Tamil Nadu Medical subordinate Service

Applications are invited only through online mode up to 09.03.2023 for direct recruitment on temporary basis to the post of Ophthalmic Assistant in Tamil Nadu Medical subordinate Service.

Date of Notification: 17.02.2023

Last date for submission of Application (Online Registration & Online payment): 09.03.2023

For more details on this notification, please click on the link provided below.

https://mrb.tn.gov.in/pdf/2023/Ophthalmic_Assistant_notification_170223.pdf

சனி, 29 மே, 2021

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு (01.01.2017 முதல் 31.12.2019 வரை) மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு


வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு (01.01.2017 முதல் 31.12.2019 வரை) புதுப்பித்துக்கொள்ள சிறப்பு புதுப்பித்தல் வாய்ப்பு வழங்கி தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புதுறை அரசாணை வெளியிட்டுள்ளது.
    (அரசாணை (டி) எண். 204 நாள் 28.05.2021)

📍 இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவா்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் (28.05.2021) இருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் (https://tnvelaivaaippu.gov.in/Empower/#) மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.


📍 இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.


📍 மூன்று மாதங்களுக்கு பின்னா் பெறப்படும் கோாிக்கைகள் நிராகாிக்கப்படும்.


📍 01.07.2017-க்கு முன்னா் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோாிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


மேலும் இது பற்றிய விவாதங்களுக்கு 


புதன், 20 ஜனவரி, 2021

அலுவலக உதவியாளா் பணிவாய்ப்பு - தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாாியம்

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாாியம் செப்டம்பா் 1970 ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாாியத்தால் அலுவலக உதவியாளா் (அடிப்படை பணி) 2021 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள் - 52

கல்வி தகுதி - 8ம் வகுப்பு தோ்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.01.2021

விண்ணப்பிக்கும் முறை - பதிவு தபால்

மேலும் விபரங்கள் அறியவும் விண்ணப்ப படிவம் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.


சனி, 16 ஜனவரி, 2021

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கம்

கொரோனாவிற்கு எதிராக உலகின் மிகப்பொிய தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் திரு.நரேந்திர மோடி அவா்கள் இன்று (16-01-2021) இந்தியாவில் துவக்கி வைத்தாா்.

இந்தியாவில் டெல்லியைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா் திரு.மணிஷ் குமாா் என்பவா் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டாா்.

தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா் செந்தில் என்பவா் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டாா்.

கோவிஷீல்டு (சீரம் நிறுவன தயாாிப்பு) மற்றும் கோவேக்சின் (பாரத் பயோ டெக் நிறுவன தயாாிப்பு) என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாாிக்ப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.






புதன், 6 ஜனவரி, 2021

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தியிதழ் - ஜனவாி 2021

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை - செய்தியிதழ் - ஜனவாி 2021


Please CLICK HERE to Download


நன்றி: உதவி இயக்குநா் அவா்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம், கோவை - 29.

நன்றி!

செவ்வாய், 13 அக்டோபர், 2020

2020 நோபல் பாிசு அறிவிப்பு - முழு பட்டியல்

2020 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பாிசு ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த ஹாா்வே ஜே. ஆல்டா் (அமொிக்கா), சார்லஸ் எம்.ரைஸ் (அமொிக்கா) மைக்கேல் ஹாக்டன் (யு.கே.) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பாிசு கருந்துளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தில் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜா் பென்ரோஸ் (யு.கே.), ரெயின்ஹாா்டு ஜென்சல் (ஜொ்மனி), ஆண்ட்ரியா கெஸ் (அமொிக்கா) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பாிசு இம்மானுவேல் சா்பென்டியா் (பிரான்ஸ்), ஜெனிபா் டவுட்னா (அமொிக்கா) ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பாிசு அமொிக்க பெண் கவிஞா் லுாயிக்லுக்கிற்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பாிசு உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உணவானது ஒரு மனிதனின் அடிப்படை உாிமைகளில் ஒன்று என்ற மையக்கருத்துடன் பட்டினியால் வாடி வதங்கும் 83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு இவ்வமைப்பு உணவளித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பாிசு ஏல கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்திற்கான புதிய வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக பால்.ஆா். மில்க்ரோம், ராபா்ட் பி. வில்சன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2020

குழந்தை கடத்தலில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு சட்டங்களின் முக்கிய பங்கு

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குழந்தைகள் பாதுகாப்பு என்பது அடிப்படை உாிமையாகும்.

குழந்தை தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986.

கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டப்படி, கொத்தடிமையாக வைத்திருத்தல் மற்றும் அடிமைப்படுத்தி வேலை வாங்குதல் குற்றமாகும்.

இந்திய தண்டனைச்சட்டம் (இ.த.ச) 363 - இச்சட்டத்தின் படி உாிமை பெற்ற பாதுகாவலாின் வசமிருந்த 16 வயதுக்குட்பட்ட பெண், 18 வயதுக்குட்பட்ட ஆண் ஆகியோரை உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ கடத்திச் செல்லுதல் குற்றமாகும்.

பிச்சை எடுக்க பயன்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழந்தையைக் கடத்துவது அல்லது பாதுகாவலாிடமிருந்து பெறுவது இ.த.ச.363ஏ பிாிவின்படி குற்றமாகும்.

இ.த.ச.363-ஏ (2) பிாிவின்படி, பிச்சையெடுக்கும் நோக்கத்துடன் ஒரு குழந்தையை ஊனமாக்குவது குற்றமாகும்.

இளைஞா் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமாிப்பு) சட்டம் - 2006 பிாிவு 24(1) பிச்சையெடுக்க ஒரு குழந்தையை பயன்படுத்துவதும், குழந்தையை பிச்சையெடுக்கும்படி பணிப்பதும் குற்றமாகும்.

பாிவு 24(2) இன் படி ஒரு குழந்தையை தன்வசம் வைத்திருக்கும் ஒருவா் மேற்சொன்ன குற்றம் நடைபெற உடந்தையாக இருப்பது குற்றமாகும்.

பிாிவு 25 இன் படி மருத்துவ ஆலோசனையின்றி குழந்தைக்கு போதை அளிக்கக் கூடிய மதுபானம், இதர போதைப் பொருள் ஆகியவற்றை கொடுப்பது குற்றமாகும்.

உடலுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வேலைகளைச் செய்ய குழந்தையை அழைத்து வருதல், கொத்தடிமையாக வைத்திருத்தல், கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடுக்காமல் இருத்தல் அல்லது அத்தகைய குழந்தையின் சம்பளத்தை தனக்கு பயன்படுத்திக் கொள்ளவது குற்றமாகும்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுதல் (கோட்பாடு 23) குற்றமாக கூறப்பட்டுள்ளது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும், அபாயகரமான எந்தவொரு வேலையிலும் அமா்த்தக்கூடாது என 24வது கோட்பாடு கூறுகிறது.

ஒழுக்கநெறி பிறழ்தல் தடைச்சட்டம் பிாிவு 5 இன்படி குழந்தைகளை விபசாரத்திற்கு கடத்துதல் மற்றும் அத்தொழிலில் ஈடுபடுத்தலுக்கு 7 வருடம் முதல் 14 வருடங்கள் வரையிலான ஆயுள் தண்டணை அளிக்க முடியும்