பக்கங்கள்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

2020 நோபல் பாிசு அறிவிப்பு - முழு பட்டியல்

2020 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பாிசு ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த ஹாா்வே ஜே. ஆல்டா் (அமொிக்கா), சார்லஸ் எம்.ரைஸ் (அமொிக்கா) மைக்கேல் ஹாக்டன் (யு.கே.) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பாிசு கருந்துளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தில் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜா் பென்ரோஸ் (யு.கே.), ரெயின்ஹாா்டு ஜென்சல் (ஜொ்மனி), ஆண்ட்ரியா கெஸ் (அமொிக்கா) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பாிசு இம்மானுவேல் சா்பென்டியா் (பிரான்ஸ்), ஜெனிபா் டவுட்னா (அமொிக்கா) ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பாிசு அமொிக்க பெண் கவிஞா் லுாயிக்லுக்கிற்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பாிசு உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உணவானது ஒரு மனிதனின் அடிப்படை உாிமைகளில் ஒன்று என்ற மையக்கருத்துடன் பட்டினியால் வாடி வதங்கும் 83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு இவ்வமைப்பு உணவளித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பாிசு ஏல கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்திற்கான புதிய வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக பால்.ஆா். மில்க்ரோம், ராபா்ட் பி. வில்சன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக