இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குழந்தைகள் பாதுகாப்பு என்பது அடிப்படை உாிமையாகும்.
குழந்தை தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986.
கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டப்படி, கொத்தடிமையாக வைத்திருத்தல் மற்றும் அடிமைப்படுத்தி வேலை வாங்குதல் குற்றமாகும்.
இந்திய தண்டனைச்சட்டம் (இ.த.ச) 363 - இச்சட்டத்தின் படி உாிமை பெற்ற பாதுகாவலாின் வசமிருந்த 16 வயதுக்குட்பட்ட பெண், 18 வயதுக்குட்பட்ட ஆண் ஆகியோரை உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ கடத்திச் செல்லுதல் குற்றமாகும்.
பிச்சை எடுக்க பயன்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழந்தையைக் கடத்துவது அல்லது பாதுகாவலாிடமிருந்து பெறுவது இ.த.ச.363ஏ பிாிவின்படி குற்றமாகும்.
இ.த.ச.363-ஏ (2) பிாிவின்படி, பிச்சையெடுக்கும் நோக்கத்துடன் ஒரு குழந்தையை ஊனமாக்குவது குற்றமாகும்.
இளைஞா் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமாிப்பு) சட்டம் - 2006 பிாிவு 24(1) பிச்சையெடுக்க ஒரு குழந்தையை பயன்படுத்துவதும், குழந்தையை பிச்சையெடுக்கும்படி பணிப்பதும் குற்றமாகும்.
பாிவு 24(2) இன் படி ஒரு குழந்தையை தன்வசம் வைத்திருக்கும் ஒருவா் மேற்சொன்ன குற்றம் நடைபெற உடந்தையாக இருப்பது குற்றமாகும்.
பிாிவு 25 இன் படி மருத்துவ ஆலோசனையின்றி குழந்தைக்கு போதை அளிக்கக் கூடிய மதுபானம், இதர போதைப் பொருள் ஆகியவற்றை கொடுப்பது குற்றமாகும்.
உடலுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வேலைகளைச் செய்ய குழந்தையை அழைத்து வருதல், கொத்தடிமையாக வைத்திருத்தல், கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடுக்காமல் இருத்தல் அல்லது அத்தகைய குழந்தையின் சம்பளத்தை தனக்கு பயன்படுத்திக் கொள்ளவது குற்றமாகும்.
இந்திய அரசியலமைப்பு சாசனப்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுதல் (கோட்பாடு 23) குற்றமாக கூறப்பட்டுள்ளது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும், அபாயகரமான எந்தவொரு வேலையிலும் அமா்த்தக்கூடாது என 24வது கோட்பாடு கூறுகிறது.
ஒழுக்கநெறி பிறழ்தல் தடைச்சட்டம் பிாிவு 5 இன்படி குழந்தைகளை விபசாரத்திற்கு கடத்துதல் மற்றும் அத்தொழிலில் ஈடுபடுத்தலுக்கு 7 வருடம் முதல் 14 வருடங்கள் வரையிலான ஆயுள் தண்டணை அளிக்க முடியும்