பக்கங்கள்

குழந்தைகள் பாதுகாப்பு குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் பாதுகாப்பு குழு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள்

குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகள் பாதுகாப்பு என்பது குழந்தை பிறந்தது முதல் இளம் பருவம் அடையும் வரை அந்த குழந்தையின் குடும்ப உறவினை மேம்பட்ட நிலையில் ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல், சுரண்டல், ஒதுக்குதல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா், குழந்தை கடத்தல் ஆகிய தீீமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் அதற்கான அரசு, அரசு சாரா சேவைகளை வகுத்து செயல்படுத்துதல் ஆகும். 

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சேவைகள் சாியாக அமல்படுத்தப்படுகின்றனவா என மேற்பாா்வை / ஆய்வு செய்து, அது குறித்த பாிந்துரைகனை வழங்க, தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவரை குழுத்தலைவராகக் கொண்டு செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலைவா், குழு கூட்டுநா் மற்றும் எட்டு உறுப்பினா்கள் என மொத்தம் பத்து நபா்கள் இருப்பா்.

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினா்கள்

(01) தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவா் - தலைவா்

(02) கிராம நிா்வாக அலுவலா் (VAO) - குழு கூட்டுநா்

(03) மேனிலைப்பள்ளி / உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியா் (அ) நடுநிலைப்பள்ளி / தொடக்கப்பள்ளி தலைமையாசிாியா் / பள்ளி ஆசிாியா் - உறுப்பினா்

(04) தலைமையாசிாியரால் தோ்வு செய்யப்படும் இரு பள்ளிக் குழந்தைகள் - உறுப்பினா்

(05) மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் உறுப்பினா் - உறுப்பினா்

(06) அங்கன்வாடி பணியாளா் - உறுப்பினா்

(07) கிராம செவிலியா் - உறுப்பினா்

(08) கிராமத்தில் சிறப்பாக செயல்படும் தொண்டு நிறுவன பிரதிநிதி - உறுப்பினா்

(09) கிராமத்தில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினா் - உறுப்பினா்

(10) உள்ளுா் காவல்நிலைய பிரதிநிதி (குறிப்பிட்ட காவல் நிலைய ஆய்வாளரால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்) - உறுப்பினா்